உண்மையை வெளியிட்ட படக்குழு! பலரும் பேசி வந்த விசயம்! என்ன நடக்கிறது?

நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடி தளம் வழியே மக்கள் மனதோடு பேசினார். பயன் காட்டினார். சாமியை வைத்து மத வியாபாரம் செய்வது, ஒரு கடவுளை உயர்த்தி பேசி மற்றொரு கடவுளை தரக்குறைவாக பேசுவோர் என பலருக்கும் சாட்டையடி சம்பவமாக படம் அமைந்தது.

நல்ல வரவேற்பை பெற்றது. 2020 ல் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் டாப் 10 வரிசையில் மூக்குத்தி அம்மன் படமும் இடம் பிடித்தது.

நயன்தாரா மீண்டும் தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணையவுள்ளார். இதற்கிடையில் அவர் மிலிந்த் ராவ் இயக்கும நெற்றிக்கண் படத்திலும் நடித்து வருகிறார்.

அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் நயன்தாரா பார்வையற்றவராக காணப்பட்டார். மேலும் இப்படம் Blind என்னும் கொரிய படத்தின் ரீமேக் ஆ என பலர் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது நெற்றிக்கண் Blind படத்தின் ரீமேக் தான் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். அத்துடன் படத்தை தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதாகவும், நயன் தாராவின் உழைப்பு, வேலை செய்யும் விதம் கண்டு ஆச்சர்யமடைந்ததாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment