உண்மையிலேயே அதுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்தேன் ! மிகவும் ஓப்பனாக கூறிய ரஜினி பட நடிகை

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் குறிப்பிட்ட அந்த காரணத்துக்காகத்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய சினிமாவே அறியும் நாயகியாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே.

தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த கபாலி படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

அதன்பிறகு தென்னிந்திய சினிமாவிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

இது ஒரு புறமிருக்க நான் திருமணம் செய்து கொண்டதே விசா வாங்க தான் எனக் கூறி உள்ளது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொண்டதை பெருமையாக பேசிய ராதிகா ஆப்தேவை அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment