“உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா?..” – ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..!

சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கோலிவுட்டில் நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி என பரபரப்பான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார். 

கிசுகிசுவை பொறுத்தவரை இவரை பற்றி பேச பஞ்சமே இருக்காது இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு ஹாட் நியூஸ் வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதாவது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலுடன் 3 மாதமாக இவர் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம் மைக்கேல், ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக அவர் இந்தியா வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தியாவில் இவர்கள் இருவரும் சேர்த்து வெளியிடங்களுக்கு சென்ற பொது எடுக்க பட்ட புகைப்படம் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உண்மை, பொய் என அவர் பதிலளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறாரா? என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் இருக்கிறார் என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். மற்றொரு ரசிகர் உங்களுக்கு இந்த ஆண்டு திருமணம்? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு தான் யாரையும் எப்போதும் வெறுப்பதில்லை என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment