இதை நோக்கி தான் கதை செல்லும் இது உண்மை என்றால் தல 60 கண்டிப்பாக ஹிட் தான் வெளிவரும் உண்மை

நேர்கொண்ட பார்வையை அடுத்து அஜித்துக்கு மற்றும் ஒரு ஹிட் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வையை போன்று இது எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை. வினோத் அஜித்துக்காகவே எழுதி வைத்துள்ள புதுக்கதை.

தல 60 என்று தற்போதைக்கு அழைக்கப்படும் அந்த படத்தின் பூஜை நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது.

தல 60 படத்தில் அஜித் கார் பந்தய வீரராக வரக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் உடல் எடையை குறைத்து கிளீன் ஷேவ் செய்து தலைக்கு டை அடித்திருப்பதற்கு இது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அஜித் முன்னதாக ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் காக்கிச் சட்டை போட்டுள்ளார். மேலும் போலீஸ் கதையை படமாக எடுப்பதில் வல்லவர் என்பதை தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் நிரூபித்தவர் வினோத்.

அதனால் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்தார் என்றால் அந்த கதை நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி என்றால் தலக்கு இன்னொரு ஹிட் பார்சல் தான். போலீஸ் கதை அஜித்துக்கும், வினோத்துக்கும் ராசி என்பதால் தல 60 கண்டிப்பாக ஹிட்டாகும்.

பல காலம் கழித்து அஜித்தை இளமையான லுக்கில் பார்த்த ரசிகர்களால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பது தெரிந்தால் இன்னும் மகிழ்வார்கள்.

நேர்கொண்ட பார்வை ரீமேக் தான் என்றாலும் எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு பெற்று ஹிட்டாகியுள்ளது. அஜித்துக்கு முக்கியத்துவமே இல்லை இந்த படம் எப்படி ஓடும் என்று நக்கலாக பேசியவர்கள் கூட தற்போது வாயடைத்து போயுள்ளனர்.

அஜித் துணிச்சலாக நடித்த அந்த கதாபாத்திரத்தை பார்த்து பிற முன்னணி ஹீரோக்களும் முன்வர வேண்டும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தல 60 படத்தில் அஜித்துக்கு யார் ஜோடியாக நடிக்கப் போகிறார், மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் நடித்தால் அது என்ன கதாபாத்திரம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

ஜான்வி தன்னை போன்றே தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் ஆசை. அவர் அம்மாவின் ஆசையை நிறைவேற்றி வைப்பார் என்று நம்பப்படுகிறது. ஜான்வி அம்மா செல்லம்.

தான் இல்லாமல் ஜான்வியால் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று முன்பு ஸ்ரீதேவி தெரிவித்தார். தற்போது தாய் இல்லாமல் சமாளித்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.

Related posts

Leave a Comment