இதை நீங்களே பாருங்க.!நீருக்கு அடியில் தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ள சினேகா-பிரசன்னா ஜோடி ??

அடேங்கப்பா! நீருக்கு அடியில் தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ள சினேகா-பிரசன்னா ஜோடி ??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.

மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் தான் அதிகமான படங்கள் நடித்துள்ளார்.தமிழில் இவர் அறிமுகமான திரைப்படம் என்னவளே.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பின்பு சினிமாத்துறையில் முன்னணி நடிகராக இருந்த பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவரும் இனைந்து அச் சமுண்டு அச் சமுண்டு திரைப்படத்தில் நடித்தார்.இந்த படத்தில் நடித்தபோது இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்தது.இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் சினேகா பிரசன்னா தம்பதியர் இன்று (மே 11) தங்களது 8 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதனால் தங்களது முதல் கொண்டாட்டத்தின் போது எடுக்கபட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சினேகா. அதில் தங்களது முதல் திருமணநாளை நீருக்கு அடியில் கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சில ரசிகர்கள் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது என தவறாக எண்ணி கமெண்டுகளை வீசி வருகின்றனர்.ஆனால் இந்த புகைப்படங்கள் பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CACUUvenUj5/?igshid=ifjkd58dsb7x

Related posts

Leave a Comment