அவர் கிட்ட கூட யாரும் நெருங்க முடியாது- விஜய், அஜித் இருவருமே ஒருவரை புகழ்ந்த நிகழ்வு

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள் அஜித், விஜய். இவர்கள் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித், விஜய் இருவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது அரிதிலும் அரிது, மேலும், இருவரும் ஒரே கருத்தை கூறுவது என்பது நாம் பார்த்திராத விஷயம்.

ஆனால், இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் குறித்து ஒரே கருத்தை கூறியுள்ளனர், இதை நடிகர் பிரபு கூறியுள்ளார்.

சிவாஜி நடித்துள்ள வசந்த மாளிகை படம் குறித்து பிரபு ஒரு பேடையில் ‘என் தம்பிகளான விஜய், அஜித் இருவரும் அப்பாவின் நடிப்பை பார்த்துவிட்டும் “சார் ஒருத்தரும் அவர் கிட்ட கூட நெருங்க முடியாது” என்று கூறினார்கள்’ என பிரபு தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment