அழகான கிளியாம் லொஸ்லியா! சேரனை பற்றி கமலிடம் என்ன இப்படி கூறிவிட்டார் கஸ்தூரி

பிக்பாஸில் 17வது போட்டியாளராக மிகுந்த பரபரப்புக்கு இடையே கடந்த வாரம் நுழைந்தார் நடிகை கஸ்தூரி. அதனால் இன்றைய எபிசோட்டை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தனர்.

ஏனெனில் இந்த ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் கஸ்தூரி எவ்வாறு புரிந்துகொண்டுள்ளார் என்பதை கமலிடம் சொல்வார் என்பதற்காக தான் காத்திருந்தனர்.

அதேபோன்று கமல் போட்டியாளர்களை பற்றி கஸ்தூரியிடம் கேட்க, மதுமிதா தமிழ்பொண்ணு, அபிராமி, ஷெரீன், ஷாக்சி லூசு பொண்ணுங்க. லாஸ்லியா அழகான கிளி, தங்கமான பொண்ணு, முகேன் ஒரு மொக்க ஜோக் என்று கூறினார்.

அதோடு சேரன் உடை அணிந்து வந்திருக்கும் நபர் உண்மையில் சேரன் இல்லை, ஏனெனில் நான் பார்த்த சேரன் வேறு, இங்கிருக்கும் சேரன் வேறு, அவருக்கு அவ்ளோ கோபம் வரும் என்றும் கூறினார்.

இதனால் சேரன் வெற்றிக்காக தன்னுடைய உண்மை முகத்தை காட்டாமல் நடித்து வருகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related posts

Leave a Comment