அடேயப்பா! எதிர்த்தவர்களை வாயடைக்க வைத்த சூர்யா! சூப்பரான சாதனை

சாதாரண மனிதனும் பெரும் சாதனை படைக்க முடியும் என்பதை கடும் போராட்டத்திற்கு மத்தியில் எடுத்து வைக்கும் கதைகளம் சூரரை போற்று என்று தெரிகிறது.

சுதே கே பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இப்படம் பலரின் மத்தியில் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. வரும் நவம்பர் 12 ல் தீபாவளி ஸ்பெஷலாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

சினிமா பிரபலங்களும் இப்படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ஏற்கனவே பாடல்கள் பெரும் சாதனை செய்துவிட்டன.

அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. தற்போது 17 மில்லியன் பார்வைகளை கடந்து Youtube ல் சாதனை செய்துள்ளது.

சூர்யாவே தயாரித்துள்ள இப்படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிடப்போவதாக அறிவித்த போது சினிமா வர்த்தகத்தை சேர்ந்த பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விமர்சித்தனர். ஆனால் சூர்யா இப்படத்தின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகை சினிமா ஊழியர்களின் நலனுக்காக தானமாக வழங்கியது விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்தது.

Related posts

Leave a Comment