அஜித்துடன் என்னை இணைத்தது இந்த காதல் தான்! பிரபல ஹாலிவுட் நடிகை

அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாகவுள்ள படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

படத்தின் டிரைலர், பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் கடந்த மாதம் வெளியான நிலையில் இரண்டாவது பாடலான காலம் சமீபத்தில் வெளியானது.

யுவனின் இசையில் உருவாகியிருந்த இப்பாடலில் பிரபல ஹாலிவுட் நடிகையும் தமிழ் பெண்ணுமான கல்கி கொய்ச்லின்(Kalki Koechlin) சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் அவர் பேசுகையில், போனிஜி தான் என்னை அழைத்தார். தென்னிந்திய சினிமாவில் எனக்கு இப்படியொரு விஷயம் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அஜித், நல்ல பண்பாளர், அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு செட்டில் தானாக வந்து எனக்கு Hi சொல்வது அவர் மட்டும் தான். நாங்கள் இருவரையும் இணைந்தது செல்ல நாய்கள் மீதான எங்களது காதல் தான் என கூறினார்.

Related posts

Leave a Comment